இது அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மேலும் சிக்கல்களைத் தடுக்க ஆரம்பகால நோயறிதலின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்குக் கற்பிப்பதை ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த விழிப்புணர்வுகளில் உள்ள இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கும் உலகளவில் பாதிக்கப் பட்டச் சமூகங்களை ஆதரிப்பதற்கும் இது முதன்முதலில் 1996 ஆம் ஆண்டில் சர்வதேச மூட்டழற்சி மற்றும் முடக்குவாத நோய் அமைப்பினால் (ARI) நிறுவப்பட்டது.
மூட்டழற்சி ஆனது மூட்டுகள் மற்றும் இணைப்புத் திசுக்களைப் பாதிக்கிறது என்பதோடுஇதனால் வலி மற்றும் விறைப்பு நிலை ஏற்படுகிறது என்ற நிலையில் இதில் கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் உட்பட 100க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Achieve Your Dreams" என்பதாகும்.