உலக மூட்டழற்சி விழிப்புணர்வு தினம் 2026 - அக்டோபர் 12
October 13 , 2026 9 days 90 0
மூட்டழற்சி (Arthritis) என்பது மூட்டுகளை பாதிக்கும் ஒரு நிலையாகும், மேலும் இது வலி, வீக்கம், விறைப்பு மற்றும் நகர்வதில் சிரமத்தை ஏற்படுத்தும்.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Achieve Your Dreams என்பதாகும்.
இந்த தினமானது மூட்டழற்சியுடன் வாழும் மக்களுக்கான ஆரம்பகால நோயறிதல், சரியான சிகிச்சை மற்றும் ஆதரவை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் உட்பட அனைத்து வயதினரையும் மூட்டழற்சி பாதிக்கலாம்.
எலும்பு மூட்டழற்சி / மூட்டுத் தேய்மானம் (osteoarthritis), முடக்கு வாதம் (rheumatoid arthritis) மற்றும் கீல்வாதம் (gout) ஆகியவை பொதுவான வகைகளில் அடங்கும்.
இதற்கான காரணங்கள் வகையைப் பொறுத்து மாறுபடும், மேலும் மூட்டுத் தேய்மானம், தன்னுடல் தாக்க எதிர்வினைகள், மரபியல் மற்றும் முந்தைய காயங்கள் ஆகியவை இதில் அடங்கும்.