உலக மூத்த குடிமக்கள் தினம் - ஆகஸ்ட் 21
August 23 , 2022
1095 days
503
- இது அமெரிக்காவில் தேசிய மூத்த குடிமக்கள் தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
- மனிதச் சமுதாயத்தில் முதியோர்களின் பங்களிப்பை வெகுவாகச் சிறப்பித்துக் காட்டி அவர்களைக் கெளரவிப்பது என்பது இத்தினத்தின் நோக்கமாகும்.
- இந்தத் தினமானது 1988 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதியன்று அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனின் பிரகடனத்தின் மூலம் தோற்றுவிக்கப்பட்டது.
- 2050 ஆம் ஆண்டில் முதியோர்களின் எண்ணிக்கை 1.5 பில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
- இந்த அதிகரிப்பானது கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மிகவும் பரவலாகக் காணப்படும்.
- 2050 ஆம் ஆண்டில் குறைவான வளர்ச்சியடைந்த நாடுகள், நமது புவியில் வாழும் முதியவர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான நபர்களைக் கொண்டு இருக்கும்.

Post Views:
503