உலக மேசைப் பந்தாட்ட (டேபிள் டென்னிஸ்) தினம் – ஏப்ரல் 06
April 13 , 2021 1579 days 642 0
உலக மேசைப் பந்தாட்ட தினமானது சர்வதேச மேசைப் பந்தாட்டக் கூட்டமைப்பின் முன்னெடுப்பாகும்.
இத்தினம் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உலகளவில் மேசைப் பந்தாட்ட விளையாட்டை ஊக்குவிப்பதற்காக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கடைபிடிக்கப் படுகிறது.
மேலும் இத்தினம் மேம்பாடு மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டுத் தினத்தையும் குறிக்கிறது.
பாலினச் சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தல் போன்றவற்றை ஊக்குவிக்க மேசைப் பந்தாட்டத்தைப் பிரபலமாக்கவும், உலகளாவியதாகவும், அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் (popular, universal and inclusive) அதை மாற்றுவதற்கு 2021 ஆம் ஆண்டு உலக மேசைப் பந்தாட்ட தினம் ஈடுபாடு செலுத்தும்.
2021 ஆம் ஆண்டு உலக மேசைப் பந்தாட்ட தினமானது ஐ.நா.வின் 5வது நீடித்த மேம்பாட்டு இலக்கான பாலினச் சமத்துவத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.