உலக வங்கியானது, "உலக மேம்பாட்டு அறிக்கை 2025: மேம்பாட்டுக்கானத் தர நிலைகள்" அறிக்கையை வெளியிட்டது.
சர்வதேசத் தரநிலைகள் பல வளர்ந்து வரும் நாடுகளைப் பின்தங்க வைக்கும் அதே வேளையில், செல்வ வளம் மிக்க நாடுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பயனளிக்கின்றன என்பதை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
தரநிலைகள் என்பது அமைப்புகள், செயல்முறைகள் மற்றும் தயாரிப்புகளில் நிலைத் தன்மை, இணக்கத்தன்மை மற்றும் தரத்தை உறுதி செய்யும் பகிரப்பட்ட விதிகள் ஆகும்.
அவை வர்த்தகத்தை அதிகரிப்பதன் மூலமும், பரிவர்த்தனைச் செலவுகளைக் குறைப்பதன் மூலமும், புதுமைகளை ஊக்குவிப்பதன் மூலமும், தொழில்துறை மேம்பாட்டினை அதிகரிப்பதன் மூலமும் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கின்றன.
தரநிலைகள் தேசியப் பாதுகாப்பை மேம்படுத்துகின்றன, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற சமூக விளைவுகளை மேம்படுத்துகின்றன என்பதோடுமேலும் ஊழலைக் குறைப்பதன் மூலம் நிர்வாகத்தை வலுப்படுத்துகின்றன.
வர்த்தகப் போர்களில் வரி அல்லாத நடவடிக்கைகளாக அவற்றைப் பயன்படுத்துவதும், உலகளாவியத் தரநிலைகளை நிர்ணயிக்கும் தொழில்நுட்பக் குழுக்களில் வளர்ந்து வரும் நாடுகளின் குறைவான பிரதிநிதித்துவமும் இந்தச் சவால்களில் அடங்கும்.