சமீபத்தில், உலக வங்கியானது, “நல்வாழ்க்கைக்கான தரவுகள் (Data for Better lives)” என்ற தலைப்பு கொண்ட 2021 ஆம் ஆண்டின் உலக மேம்பாட்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
உலக மேம்பாட்டு அறிக்கையானது, ஒருவரும் விடுபடவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் ஏழை மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துதல் மற்றும் மேம்பாட்டுத் திட்ட நோக்கங்களை மேம்படுத்துதல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துகிறது.
ஏழை மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் திறன் கொண்ட மாறி வரும் தரவுகளின் மகத்தான திறனை இந்த அறிக்கை குறிப்பிட்டுக் காட்டுகிறது.
அதே சமயம் தனிநபர்கள், வணிகர்கள் மற்றும் சமுதாயம் ஆகியவற்றைப் பாதிக்கும் அதன் மறுபக்கத்தின் விளைவினையும் இந்த அறிக்கை குறிப்பிட்டுக் காட்டுகிறது.
இந்த அறிக்கையின் மூலம் உலக வங்கியானது,
அதன் உறுப்பினர் நாடுகளுள், எந்தெந்த நாடுகளில் பொது மற்றும் தனியார் துறை முதலீடுகள், முக்கியமானதாக உள்ளது என்பதைக் கண்டறிந்து அவற்றிற்கு ஆதரவளித்தல்.
கொள்கைச் சீர்திருத்தங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவி ஆகியவற்றிற்கான மகத்தான திட்டங்களை வரையறுத்தல்.
எல்லை கடந்த ஒத்துழைப்பினை ஒன்று திரட்டுவதற்கும் அதனை ஊக்குவிப்பதற்கும் வேண்டி உலகளாவிய திட்டங்கள் உதவக் கூடிய பகுதிகளைக் குறிப்பிட்டுக் காட்டுதல்