உலகளாவிய வளர்ச்சிச் சவால்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் அவசியத்தை இத்தினம் எடுத்துக்காட்டுகிறது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 1972 ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தின் மூலம் இத்தினத்தை நிறுவியது.
இத்தினம் ஐக்கிய நாடுகள் தினத்துடனும் (அக்டோபர் 24), 1970 ஆம் ஆண்டில் இரண்டாவது ஐக்கிய நாடுகளின் வளர்ச்சிப் பத்தாண்டுகளுக்கான சர்வதேச மேம்பாட்டு உத்தியை ஏற்றுக்கொண்டதுடனும் ஒத்துப்போகிறது.
வளர்ச்சி தொடர்பான தகவல்களைப் பரப்புவதை மேம்படுத்துவதையும், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பொதுக் கருத்தைத் திரட்டுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பங்களின் (ICT) பங்கை இது சிறப்பித்துக் காட்டுகிறது.