TNPSC Thervupettagam

உலக யானைகள் தினம் 2026 - ஆகஸ்ட் 12

August 14 , 2026 5 days 82 0
  • யானைகள் பாதுகாப்பு மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் மற்றும் வழித்தடங்களைப் பாதுகாப்பதை மேம்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலகின் காட்டு ஆசிய யானைகளில் கிட்டத்தட்ட 60% இந்தியாவில் உள்ளன, 2021-25 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 22,446 யானைகள் இருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
  • இந்தியா முழுவதும் உள்ள 33 யானைகள் காப்பகங்கள் மற்றும் 150 அடையாளம் காணப் பட்ட வழித்தடங்கள் மூலம் இவை பாதுகாக்கப்படுகின்றன.
  • 1992 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட யானைகள் பாதுகாப்புத் திட்டமானது, வாழ்விடப் பாதுகாப்பு, அறிவியல் கண்காணிப்பு மற்றும் மனித-யானை மோதலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை ஆதரிக்கிறது.
  • இந்தியாவின் முதல் டிஎன்ஏ அடிப்படையிலான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு, யானைகளை மரபணு ரீதியாக அடையாளம் காண சாண மாதிரிகளைப் பயன்படுத்தியது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Bringing the world together to help elephants” என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்