யானைகள் பாதுகாப்பு மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் மற்றும் வழித்தடங்களைப் பாதுகாப்பதை மேம்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலகின் காட்டு ஆசிய யானைகளில் கிட்டத்தட்ட 60% இந்தியாவில் உள்ளன, 2021-25 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 22,446 யானைகள் இருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள 33 யானைகள் காப்பகங்கள் மற்றும் 150 அடையாளம் காணப் பட்ட வழித்தடங்கள் மூலம் இவை பாதுகாக்கப்படுகின்றன.
1992 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட யானைகள் பாதுகாப்புத் திட்டமானது, வாழ்விடப் பாதுகாப்பு, அறிவியல் கண்காணிப்பு மற்றும் மனித-யானை மோதலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை ஆதரிக்கிறது.
இந்தியாவின் முதல் டிஎன்ஏ அடிப்படையிலான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு, யானைகளை மரபணு ரீதியாக அடையாளம் காண சாண மாதிரிகளைப் பயன்படுத்தியது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Bringing the world together to help elephants” என்பதாகும்.