உலக ரோபோடிக்ஸ் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு விருதுகள்
July 20 , 2017 2905 days 1218 0
வாஷிங்டனில் நடைபெற்ற முதல் உலக ரோபாட்டிக்ஸ் ஒலிம்பியாட்டில் (First Global Robotics Olympiad) 157 நாடுகள் கலந்துகொண்டது. இதில் ஏழு மாணவர்களைக் கொண்ட இந்தியாவைச் சேர்ந்த குழு இரண்டு விருதுகளைப் வென்றுள்ளது
மும்பையைச் சேர்ந்த மாணவர்கள் குழு வாஷிங்டன்னில் பர்ஸ்ட் குளோபல் ஒருங்கிணைத்த ஹாங் ஹெங் பொறியியல் வடிவமைப்பு விருது பிரிவில் தங்கப் பதக்கமும், சர்வதேச ரோபாட்டிக்ஸ் சவால் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.
இந்த அணியின் இளைய உறுப்பினரான 15 வயது ராகேஸ் (Rahesh), இந்த அணிக்குத் தலைமை தாங்கினார்.
இவர்கள் தயாரித்த ரோபோட்டுக்கு நியூட்ரினோ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தரையில் கிடந்த ஆரஞ்சு மற்றும் நீல நிற பந்துகளை எடுத்து, வகைப்படுத்தியது. மேலும், 2.5 அடி வரையான தடைகளை ஏறிக் கடக்கவல்லது.
பர்ஸ்ட் குளோபல் எனும் இலாப நோக்கம் இல்லாத தொண்டு நிறுவனம், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித ஆர்வத்தை தூண்ட ஆண்டுதோறும் ரோபோடிக் போட்டிகளை நடத்துகிறது
இந்த உலக ரோபோடிக் போட்டியில், ஒலிம்பிக் பாணியில் ஒவ்வொரு நாட்டின் சார்பாக ஒரு அணி மட்டுமே பங்குபெறும்.
வாஷிங்டன் டி.சியில் ஏற்பாடு செய்யப்பட்ட `FIRST Global Challenge 2017' இந்த ரோபாட்டிக்ஸ் ஒலிம்பியாட்டின் தொடக்கப் பதிப்பாக இருந்தது. அதில் 157 நாடுகள் பங்கேற்றன.
அடுத்தாண்டுக்கான போட்டி மெக்சிகோவில் நடைபெற இருக்கிறது.