உலக ரோபோட்டிக்ஸ் (எந்திர மனிதன்) கண்டுபிடிப்புகளின் மையம்
January 14 , 2022 1405 days 611 0
2025 ஆம் ஆண்டிற்குள் உலக ரோபாட்டிக்ஸ் (எந்திர மனிதன்) கண்டுபிடிப்புகளின் மையமாக மாறும் இலக்கை அடைவதற்கான ஒரு ஐந்தாண்டு செயல் திட்டத்தை சீனா அறிவித்துள்ளது.
2021 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் நாட்டின் ரோபாட்டிக்ஸ் (எந்திரவியல்) துறையின் இயக்க வருமானம் ஆண்டுக்கு 20% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சீனாவின் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2021 உலக ரோபோ அறிக்கையின்படி, தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகியவை ஆசிய-பசிபிக் நாடுகளில் முன்னணியில் உள்ள மிகவும் எந்திர மயமாக்கப் பட்ட மூன்று நாடுகள் ஆகும்.