September 16 , 2026
5 days
76
- லிம்போமா மற்றும் நிணநீர் அமைப்பு (lymphatic system) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது லிம்போமா கூட்டணியால் (Lymphoma Coalition) 2004 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
- லிம்போமா என்பது லிம்போசைட்டுகளை (ஒரு வகையான வெள்ளை இரத்த அணு) பாதிக்கும் இரத்தப் புற்றுநோயாகும்.
- இதன் இரண்டு முக்கிய வகைகள் ஹாட்ஜ்கின் லிம்போமா மற்றும் நாண்-ஹாட்ஜ்கின் (Non-Hodgkin) லிம்போமா ஆகும்.
- நிணநீர் அமைப்பில் நிணநீர் கணுக்கள், மண்ணீரல், தைமஸ் சுரப்பி மற்றும் எலும்பு மஜ்ஜை ஆகியவை அடங்கும்.
- வலியற்ற வீங்கிய நிணநீர் கணுக்கள், காய்ச்சல், இரவுநேர வியர்வை, சோர்வு மற்றும் விவரிக்க முடியாத எடை இழப்பு ஆகியவை பொதுவான அறிகுறிகளாகும்.
- 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Navigating Lymphoma and Chronic Lymphocytic Leukaemia (CLL) Together என்பதாகும்.
Post Views:
76