உலக வங்கியின் இந்தியாவுக்கான நிர்வாக இயக்குனர் – எஸ்.அபர்ணா
August 6 , 2017 2910 days 1194 0
உலக வங்கிக்கான இந்தியாவின் நிர்வாக இயக்குனராக எஸ்.அபர்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் குஜராத் பணிப் பிரிவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணியாளர் (IAS) ஆவார். இவர் இந்தியா, பங்களாதேஷ்,பூட்டான் மற்றும் இலங்கை ஆகிய நான்கு நாடுகளுக்கும் சேர்த்து , அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிரதிநிதியாக பதவி வகிக்கவுள்ளார்.
1988 ஆம் ஆண்டின் பணியாளர் பிரிவைச் சேர்ந்த அபர்ணா, தற்பொழுது குஜராத் முதல்வர் விஜய் ரூபனியின் முதன்மைச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது உலக வங்கிக்கான இந்தியாவின் நிர்வாக இயக்குனராக பதவி வகிக்கும் சுபாஷ் கார்க்குக்குப் பதிலாக அபர்ணா அப்பணியினைத் தொடரவுள்ளார்.
சுபாஷ்கார்க், மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளராக (Economic Affairs Secretary) நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் தலைமையிலான அமைச்சரவை நியமனங்கள் குழு (Appointments Committee of the Cabinet - ACC) இவரது பணி நியமனத்தை உறுதி செய்தது.