2025 ஆம் ஆண்டு உலக வங்கியின் நில மாநாடானது, வாஷிங்டன்D.C. நகரில் அமைந்து உள்ள உலக வங்கி தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்வின் கருத்துரு, "Securing Land Tenure and Access for Climate Action: Moving from Awareness to Action" என்பதாகும்.
இந்த நிகழ்வில் இந்தியக் குழுவானது, அதன் மாற்றம் மிக்க SVAMITVA திட்டம் மற்றும் கிராம் மஞ்சித்ரா தளத்தினை முன்வைத்துள்ளது.
SVAMITVA திட்டமானது, 1.6 லட்சம் கிராமங்களில் உள்ள சுமார் 24.4 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளுக்கு ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் புவியிடங்காட்டி தொழில்நுட்பம், சொத்து அட்டைகளைப் பயன்படுத்தி கிராமப்புறச் சொத்துக்களின் சட்டப்பூர்வ உரிமையை வழங்குகிறது.