உலக வங்கியின் முதன்மையான பாலினம் சார்ந்த செயற்கருவித் தொகுப்புப் புத்தகம்
January 6 , 2023 955 days 377 0
"அனைத்து பாலினங்களுக்குப் பொருந்தக்கூடிய நகர்ப்புறப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களை உருவாக்குதல்" என்பதன் அடிப்படையிலான பாலினம் சார்ந்த செயற் கருவித் தொகுதிப் புத்தகம் ஆனது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இது போக்குவரத்து மற்றும் நகர வடிவமைப்பு ஆகியவற்றில் உள்ள பாலினம் சார்ந்த சிக்கல்களைக் கவனத்தில் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
செயற்கருவித் தொகுப்புப் புத்தகம் என்பது உலக வங்கியினால் வெளியிடப்பட்ட இரண்டு தொகுதிகள் கொண்ட வழிகாட்டியாகும்.
அனைத்து பாலினங்களுக்குப் பொருந்தக் கூடிய நகர்ப்புறப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களை உருவாக்குதல் திட்டத்தை வடிவமைப்பதற்கு என்று நகர்ப்புற அமைப்புகளுக்குத் தேவையான நான்கு அம்ச அமலாக்கக் கட்டமைப்பின் விவரங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.