TNPSC Thervupettagam

உலக வங்கியின் வருவாய் வகைப்பாடு 2026

July 8 , 2026 7 hrs 0 min 8 0
  • 2025 ஆம் ஆண்டிற்கான தனிநபர் மொத்த தேசிய வருமான (GNI) தரவுகளின் அடிப்படையில் 2026-27 ஆம் ஆண்டிற்கான நாடுகளின் வருவாய் வகைப்பாட்டை உலக வங்கி குழுமம் (WBG) வெளியிட்டுள்ளது.
  • உலக வங்கியானது நாடுகளை குறைந்த வருவாய், குறைந்த நடுத்தர வருவாய், உயர் நடுத்தர வருவாய் மற்றும் அதிக வருவாய் என நான்கு பிரிவுகளாக வகைப் படுத்துகிறது.
  • இந்தியா 1,176 முதல் 4,635 அமெரிக்க டாலர் வரையிலான தனிநபர் மொத்த தேசிய வருமானத்துடன் (GNI) குறைந்த நடுத்தர வருவாய் பிரிவில் தொடர்ந்து நீடிக்கிறது.
  • இந்த வகைப்பாடானது அட்லஸ் முறையைப் பயன்படுத்துவதுடன் இது குறுகிய கால நாணய ஏற்ற இறக்கங்களைக் குறைக்க மாற்று விகிதங்களின் மூன்றாண்டு நகரும் சராசரியைப் பயன்படுத்துகிறது.
  • ஜோர்டான், மைக்ரோனேசியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, வியட்நாம் மற்றும் டோகோ உள்ளிட்ட ஆறு நாடுகள் அதிக வருவாய் பிரிவுகளுக்கு முன்னேறியுள்ளன.
  • குறைந்த வருவாய் கொண்ட பொருளாதார நாடுகளின் பங்கு 2026 ஆம் ஆண்டில் 30 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாகக் குறைந்துள்ளதுடன் இது சலுகை நிதி மற்றும் மேம்பாட்டு உதவிகளைப் பெறுவதைப் பாதிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்