இந்தியாவின் அன்வர் ஹுசைன் ஷேக், வர்த்தகத்திற்கான தொழில்நுட்பத் தடைகள் குறித்த உலக வர்த்தக அமைப்பின் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மெக்சிகோவைச் சேர்ந்த எலிசா மரியா ஓல்மெடா டி அலெஜான்ட்ரோ என்பவரை அடுத்து ஷேக் இந்தப் பொறுப்பினை ஏற்க உள்ளார்.
உலக வர்த்தக அமைப்பு என்பது 164 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பலதரப்பு அமைப்பாகும்.
இது உலகளாவிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான விதிகளை உருவாக்கச் செய்வதோடு வர்த்தகம் தொடர்பானப் பிரச்சினைகளில் நாடுகளுக்கு இடையே எழும் சர்ச்சைகளையும் தீர்க்கச் செய்கிறது.
இந்தியா 1995 ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பின் அடிப்படை உறுப்பினராக விளங்குகிறது.