TNPSC Thervupettagam

உலக வர்த்தக அறிக்கை 2025

September 24 , 2025 3 days 57 0
  • உலக வர்த்தக அமைப்பானது, 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதியன்று WTO பொது மன்றத்தில் 2025 ஆம் ஆண்டு உலக வர்த்தக அறிக்கையை வெளியிட்டது.
  • செயற்கை நுண்ணறிவு ஆனது 2040 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய வர்த்தகத்தினை 34% முதல் 37% வரை அதிகரிக்கக் கூடும் என்று அறிக்கை கணித்துள்ளது.
  • பல்வேறு கொள்கை மற்றும் தொழில்நுட்ப சூழ்நிலைகளின் கீழ் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 12% முதல் 13% வரை உயரக்கூடும்.
  • செயற்கை நுண்ணறிவினால் செயல்படுத்தும் பொருட்களில் உலகளாவிய வர்த்தகம் 2023 ஆம் ஆண்டில் 2.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டது.
  • குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் அதிக வருமானம் கொண்ட நாடுகளுடனான டிஜிட்டல் இடைவெளியை 50% குறைத்தால், வருமானம் ஆனது முறையே 15% மற்றும் 14% உயரக்கூடும்.
  • 2012 ஆம் ஆண்டில் 130 ஆக இருந்த செயற்கை நுண்ணறிவு தொடர்பான பொருட்களுக்கான அளவு கட்டுப்பாடுகளின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் கிட்டத் தட்ட 500 ஆக உயர்ந்தது.
  • உயர் மற்றும் உயர்-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில்தான் இந்தக் கட்டுப்பாடுகள் பெரும்பான்மையாக விதிக்கப் பட்டுள்ளன.
  • சில குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் இன்னும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பொருட்களுக்கு 45% வரை பிணை சார் வரிகளை எதிர்கொள்கின்றன.
  • உலக வர்த்தக அமைப்பில் 80 செயற்கை நுண்ணறிவு தொடர்பான வர்த்தகக் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.
  • இந்த அறிக்கையானது தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் பரந்த அளவிலான பங்களிப்பை ஊக்குவிக்கிறது மற்றும் சேவைகளில் வர்த்தகம் குறித்த பொது ஒப்பந்தத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட உறுதிமொழிகளை ஊக்குவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்