பாலைவனமாக்கலை எதிர்கொள்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டு அமைப்பு (UNCCD) மற்றும் அமெரிக்காவின் தேசிய வறட்சித் தணிப்பு மையத்தின் (NDMC) அறிக்கையானது 2023 முதல் 2025 ஆம் ஆண்டு வரையில் உலகளாவிய வறட்சி அபாயப் பகுதிகள் தீவிரமடைவதை எடுத்துக்காட்டுகிறது.
கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவில் சுமார் 90 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையான பட்டினி நிலையை எதிர்கொள்கின்றனர்.
ஜிம்பாப்வேயின் மக்காச்சோள பயிர் இழப்புகள் 70% அளவினைத் தாண்டியுள்ளன.
சாம்பியாவின் ஜாம்பேசி நதியின் ஓட்டம் ஆனது அதன் நீண்டகாலச் சராசரியில் 20% ஆகக் குறைந்தது.
ஸ்பெயினின் ஆலிவ் எண்ணெய் உற்பத்தி இரண்டு ஆண்டுகளில் சுமார் 50% குறைந்து, ஐரோப்பா முழுவதும் விலை ஏற்றத்தைத் தூண்டியது.
பனாமா கால்வாய் வறட்சியானது தினசரிக் கப்பல் போக்குவரத்தை சுமார் 38 என்ற எண்ணிக்கையிலிருந்து 24 ஆகக் குறைத்துள்ளது.
எத்தியோப்பியாவில் குழந்தைத் திருமணங்கள் இரட்டிப்பாகின என்பதோடு மேலும் வறட்சி காரணமாக ஜிம்பாப்வேயில் பெருமளவில் பள்ளி இடை நிற்றல் பதிவாகின.
இந்தியாவின் கோதாவரி மற்றும் கிருஷ்ணா போன்ற இரு நதிப் படுகைகள் மீண்டும் மீண்டும் வறட்சியை எதிர்கொள்கின்றன என்ற நிலையில் அரிசி மற்றும் சர்க்கரை உற்பத்தி குறைவதால் உணவுப் பொருட்களின் விலை பணவீக்கம் உயர்கிறது.
வறட்சிப் பாதிப்புகள் ஆனது மகாராஷ்டிரா, இராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில் விவசாயிகளைத் துயர நிலைக்குத் தள்ளி இடம் பெயரவும் செய்தது.