உலக வலசை போகும் (இடப் பெயர்வு) பறவைகள் தினம் – அக்டோபர் 10
October 13 , 2020 1756 days 991 0
உலக வலசை போகும் பறவைகள் தினமானது உலகம் முழுவதும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று அனுசரிக்கப் படுகின்றது.
இது வலசை போகும் பறவைகள் மற்றும் அவற்றின் வாழிடங்களின் பாதுகாப்பு குறித்து உலகளாவிய அளவிலான கவனத்தைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இந்த உலகளாவிய திட்டமானது பறவைகளினால் எதிர் கொள்ளப்படும் பல்வேறு அச்சுறுத்தல்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுகின்றது.
2006 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளானது மே மற்றும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை ஆகிய 2 குறிப்பிட்ட தினங்கனை உலக வலசை போகும் பறவைகளின் தினமாக அனுசரிக்க முடிவு செய்தது.
இந்த ஆண்டு இத்தினமானது மே 09 மற்றும் அக்டோபர் 10 அன்று அனுசரிக்கப் பட்டது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “பறவைகள் நமது உலகத்தை இணைக்கின்றன” என்பதாகும்.