உலக வானிலை பண்புக்கூறு குறித்த வருடாந்திர அறிக்கை 2025
January 3 , 2026 3 days 52 0
2025 ஆம் ஆண்டானது, 2024 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட உலகளாவிய வெப்பநிலை பதிவை விட அதிகமாக இல்லாவிட்டாலும், இதுவரை பதிவு செய்யப்பட்ட வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இது இருக்கும்.
2015 ஆம் ஆண்டிலிருந்து, சில நிகழ்வுகள் சுமார் 10 மடங்கு அதிகமாக இருப்பதுடன் வெப்ப அலைகள் கணிசமாக மிகவும் தீவிரமாகி விட்டன.
WWA 2025 அறிக்கையானது, அதன் மனிதாபிமான தாக்க அளவுருக்களைப் பூர்த்தி செய்த 157 தீவிர வானிலை நிகழ்வுகளை அடையாளம் கண்டுள்ளது.
வெள்ளம் மற்றும் வெப்ப அலைகள் ஆகியவை ஒவ்வொன்றும் 49 நிகழ்வுகளுடன் மிகவும் அடிக்கடி நிகழ்ந்தவையாக உள்ளன என்ற ஒரு நிலையில்அதைத் தொடர்ந்து புயல்கள், காட்டுத்தீ மற்றும் வறட்சி ஆகியவை ஏற்பட்டுள்ளன.