இது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 04 முதல் 10 ஆம் தேதி வரை உலகம் முழுவதும் அனுசரிக்கப் படுகிறது.
மனித நிலையை மேம்படுத்துவதற்கு விண்வெளி அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் பங்களிப்புகளைக் கொண்டாடுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
பொதுமக்களுக்கு இது குறித்து கல்வி கற்பித்தல், இளைஞர்களை ஊக்குவித்தல் மற்றும் விண்வெளி ஆய்வில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக இது உலக அளவில் நினைவு கூரப் படுகிறது.
இந்தத் தேதிகள் ஆனது 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 04 ஆம் தேதியன்று ஸ்புட்னிக் விண்ணில் ஏவப்பட்ட நிகழ்வு மற்றும் 1967 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதியன்று விண்வெளி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த நிகழ்வு ஆகிய இரண்டு முக்கிய நிகழ்வுகளைக் குறிக்கின்றன.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Living in Space" என்பதாகும்.