உலக விமான நிலையப் போக்குவரத்து தரவுத்தொகுப்பு 2021
July 31 , 2022 1208 days 556 0
ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல் வேர்ல்ட் என்ற அமைப்பானது வருடாந்திர உலக விமான நிலையப் போக்குவரத்து குறித்த தரவுத் தொகுப்பை வெளியிட்டுள்ளது.
இது 2021 ஆம் ஆண்டிற்கான, சிறந்த 20 விமானத் தொழில்துறை நிறுவனங்களின் உலகளாவிய விமானப் போக்குவரத்து தரவரிசைகளைப் பட்டியலிட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து, புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் (13வது) இந்தத் தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது.
இது 180க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள 2,600க்கும் மேற்பட்ட விமான நிலையங்களின் விமான நிலையப் போக்குவரத்துத் தகவல்களை உள்ளடக்கிய, இந்தத் தொழில்துறையின் மிகவும் விரிவான ஒரு விமான நிலைய புள்ளி விவர தரவுத் தொகுப்பாகும்.