இந்த ஆண்டு இத்தினமானது விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் வளங்காப்பினை மையமாகக் கொண்ட 1925 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்தினக் கொண்டாட்டங்களின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கிறது.
விலங்குகளின் வளங்காப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 04 ஆம் தேதியன்று இந்த நாள் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.
இது விலங்குகளைக் கொடுமைப் படுத்துதலுக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கையை ஊக்குவித்தல், பொறுப்பான செல்லப்பிராணி உரிமத்தினை ஊக்குவித்தல் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
"Save Animals, Save the Planet" என்ற 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துருவானது விலங்கு நலனுக்கும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் இடையிலான தொடர்பை எடுத்துக் காட்டுகிறது.