TNPSC Thervupettagam

உலக ஹியூமனாய்டு ரோபோ விளையாட்டுகள் 2026

September 1 , 2026 12 days 105 0
  • சீனாவின் ஹியூமனாய்டு ரோபோவான தியாங்காங் அல்ட்ரா 100 மீட்டரை 9.39 வினாடிகளில் கடந்தது, இது உசேன் போல்ட்டின் 9.58 வினாடிகள் என்ற ஆண்களுக்கான உலக சாதனையை விட வேகமானதாகும்.
  • இது பெய்ஜிங் ஹியூமனாய்டு ரோபோ கண்டுபிடிப்பு மையத்தால் உருவாக்கப்பட்டது மற்றும் பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ஹியூமனாய்டு ரோபோ விளையாட்டுகளில் தனது தொடக்கச் சுற்றில் வெற்றி பெற்றது.
  • திறன்பேசி நிறுவனமான ஹானர் தயாரித்த லைட்னிங் என்ற மற்றொரு ஹியூமனாய்டு ரோபோ இந்த பந்தயத்தை 9.47 வினாடிகளில் முடித்தது.
  • தியாங்காங் அல்ட்ரா ரோபோவானது 2025 ஆம் ஆண்டில் 21.50 வினாடிகளில் இருந்து 2026 ஆம் ஆண்டில் 9.39 வினாடிகளாக முன்னேற்றமடைந்தது மற்றும் 2025 ஆம் ஆண்டில் உலகின் முதல் ஹியூமனாய்டு அரை மாரத்தான் போட்டியிலும் வென்று இருந்தது.
  • இந்த விளையாட்டுகளில் கால்பந்து, நடனம் மற்றும் தொழில்துறைப் பணிகள் உட்பட 51 நிகழ்வுகள் இடம் பெற்றன, இதில் 16 நாடுகளைச் சேர்ந்த 666 அணிகளிலிருந்து 2,056 ரோபோக்கள் பங்கேற்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்