கடல் ஆமைகள் பற்றியும் அவற்றின் வாழிடங்கள் பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வேண்டி உலகக் கடல் ஆமைகள் தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
2000 ஆம் ஆண்டு முதல், “அமெரிக்க ஆமை மீட்பகம்” (American Tortoise Rescue) எனும் ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பானது இத்தினத்தை அனுசரிப்பதற்கான ஆதரவுகளை வழங்கி வருகின்றது.
2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Turtle Rocks!” என்பதாகும்.
“உலகக் கடல் ஆமைகள் தினம்” எனும் சொற்கூறினை சுசன் டெல்லம் (Susan Tellem) என்பவர் வழங்கினார்.