உலகக் காவல் துறை மற்றும் தீ சார்ந்த விளையாட்டுகள் 2019
August 23 , 2019 2186 days 764 0
2019 ஆம் ஆண்டில், உலகக் காவல் துறை மற்றும் தீ சார்ந்த விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணமான செங்குடுவில் நடைபெற்றது.
இந்தியாவின் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை வீரர்கள் 5 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் உள்ளிட்ட 10 பதக்கங்களை வென்றுள்ளனர்.
இதுபற்றி
இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒரு உலகளாவிய ஒலிம்பிக் மாதிரியான விளையாட்டுப் போட்டியாகும்.
2021 ஆம் ஆண்டுப் பதிப்பானது நெதர்லாந்தின் ரோட்டர்டாமிலும் 2023 ஆம் ஆண்டுப் பதிப்பானது கனடாவின் வின்னிபெக்கிலும் நடைபெறவிருக்கின்றது.
ஒலிம்பிக் மாதிரியான இந்த விளையாட்டுப் போட்டியில் 70ற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தடகள வீரர்கள் கலந்து கொண்டு, 60ற்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் பங்கு பெற்றனர்.