TNPSC Thervupettagam

உலகக் கொடை அளித்தல் குறியீடு

October 20 , 2019 2044 days 659 0
  • ‘அறப்பண்பு கொண்ட நாடுகள்’ பட்டியலில், அறக்கட்டளை உதவி அமைப்பினால் (Charities Aid Foundation - CAF) 128 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்தியா 82வது இடத்தில் உள்ளது.
  • CAF என்பது உலகெங்கிலும் உள்ள உயிர்களின் வாழ்க்கையையும் சமூகங்களையும் மாற்றுவதற்கு வேண்டி ‘கொடை அளித்தல் பண்பை’ ஊக்குவிக்கும் ஒரு சர்வதேச அமைப்பாகும்.
  • கடந்த பத்தாண்டுகளில் (2009 முதல் 2018 வரை) உலகளவில் 1.3 மில்லியன் மக்களை CAF ஆய்வு செய்துள்ளது. இது உலகக் கொடை அளித்தல் குறியீடாக (World Giving Index - WGI) ஏற்படுத்தப் பட்டுள்ளது.
  • WGI இன் தரவுகளின் படி, அமெரிக்கா முதலிடத்திலும் மியான்மர், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அதற்கடுத்த இடங்களிலும் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளன.
  • இந்தக் குறியீட்டில் இலங்கை, நேபாளம் (53), பாகிஸ்தான் (69), மெக்ஸிகோ (73), பிரேசில் (74) ஆகிய நாடுகளுக்கு அடுத்து இந்தியா உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்