தொண்ணூறுகளின் மைய ஆண்டுக் காலத்திலிருந்து 1% பணக்காரர்கள் உலகளவில் 38% என்ற அளவில் செல்வ செழிப்பினைக் கையகப்படுத்தியுள்ளனர் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
10% சதவீத பணக்காரர்கள் 60-80% செல்வத்தையும், ஏழை மக்கள் 5 சதவீதத்திற்கும் குறைவான செல்வத்தையும் கொண்டுள்ளனர் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
மொத்தச் சொத்து மதிப்பின் அடிப்படையிலான வரி வீதத்துடன் கூடிய முன்னேற்ற சொத்து வரிவீதம் உள்பட பல லட்சங்களுக்கு அதிபதிகள் மீது புதிய சொத்து வரிகளை விதிப்பதற்கு இந்த அறிக்கை பரிந்துரைத்தது.
1 மில்லியன் டாலருக்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கும் உலக கோடீஸ்வரர்கள் மீது விதிக்கப்படும் 1% முதல் 3% வரையிலான சொத்து வரி வீதமானது உலக வருமானத்தில் 1.6 சதவீதத்தை உருவாக்கும்.
இந்த அறிக்கையானது அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக அச்சகத்தினால் (Harvard University Press) வெளியிடப் பட்டுள்ளது.