TNPSC Thervupettagam

உலகச் சமத்துவமின்மை அறிக்கை 2026

December 15 , 2025 3 days 54 0
  • 2026 ஆம் ஆண்டு உலகச் சமத்துவமின்மை அறிக்கையானது உலக சமத்துவமின்மை ஆய்வகத்தால் வெளியிடப்பட்டது.
  • இந்தியாவில் வருமானம் ஈட்டுபவர்களில் முதல் 10% பேர் தேசிய வருமானத்தில் 58% பெறுவதாகவும், கீழ் மட்டத்தில் உள்ள 50% பேர் 15% பெறுவதாகவும் அறிக்கை கூறுகிறது.
  • இந்தியாவில் உள்ள 10% பணக்காரர்கள் மொத்த செல்வத்தில் சுமார் 65% அளவினை வைத்திருக்கிறார்கள் என்பதோடு மேலும் முதலில் உள்ள 1% பேர் 40% செல்வத்தினை வைத்திருக்கிறார்கள்.
  • உலக அளவில், மேல் மட்டத்தில் உள்ள சுமார் 10% பேர் உலகின் செல்வத்தில் 75 சதவீதத்தினை வைத்திருக்கிறார்கள் அதே நேரத்தில் கீழ் மட்டத்தில் உள்ள 50% பேர் 2% மட்டுமே வைத்திருக்கிறார்கள்.
  • இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு 15.7% ஆக இருப்பதாகவும், இது குறைந்த தொழிலாளர் ஈடுபாட்டைக் காட்டுவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
  • ஏழ்மை நிலையில் உள்ள 50% பேர் கார்பன் உமிழ்வில் 3% பங்களிக்கின்றனர், அதே நேரத்தில் மேல் மட்டத்தில் உள்ள 10% பேர் இதற்கு 77% பங்களிக்கின்றனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்