மனிதநேயம், மிகவும் பாரபட்சமற்ற தன்மை மற்றும் நடுநிலைமை ஆகியவற்றின் கொள்கைகளை ஊக்குவிப்பதோடு, அவசரநிலைகள், போர்கள் மற்றும் பேரழிவுக் காலங்களில் உதவும் தன்னார்வலர்களை கௌரவிக்கும் விதமாக இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளில் தான் அமைதிக்கான நோபல் பரிசை முதலில் பெற்றவரும், சர்வதேசச் செஞ்சிலுவை சங்கத்தின் (ICRC) நிறுவனருமான ஹென்றி டுனன்ட் பிறந்தார்.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் அதிகாரப்பூர்வ கருத்துரு, "Keeping Humanity Alive" என்பதாகும்.