TNPSC Thervupettagam

உலகத் தண்ணீர் வள மாநாடு மற்றும் கண்காட்சி 2022

September 21 , 2022 1031 days 476 0
  • இது செப்டம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை டென்மார்க் நகரில் ஏற்பாடு செய்யப் பட்டது.
  • நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், வலையமைப்பினை நிறுவுதல் மற்றும் வணிகம் செய்வதற்காகவும் நிபுணர்களை ஒன்றிணைப்பதற்காக உலகம் முழுவதும் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இது தற்போதையச் சிக்கல்கள் மற்றும் போக்குகளில் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்கச் செய்வதோடு, இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படும் இடத்தின் வலிமையையும் இது பிரதிபலிக்கிறது.
  • 2022 ஆம் ஆண்டின் மாநாடானது கோபன்ஹேகனில் திறன்மிக்க வகையில் வாழக் கூடிய நகரங்களுக்கான தண்ணீர் என்ற ஒரு கருத்துருவின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப் பட்டது.
  • இது டென்மார்க் மற்றும் பிற நார்டிக் நாடுகளிலும் மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் சிறந்த நடைமுறைகளைக் காட்சிப்படுத்தியது.
  • இந்நிகழ்ச்சியின் போது, ​​இந்தியா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் இணைந்து ‘இந்தியாவில் நகர்ப்புறக் கழிவு நீர் மேலாண்மை நிலை’ என்ற தலைப்பில் ஒரு கூட்டு வெள்ளை அறிக்கையை வெளியிட்டன.
  • இந்த வெள்ளை அறிக்கையானது, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கழிவு நீர்ச் சுத்திகரிப்பு முறையின் தற்போதைய நிலைமையினை விரிவாக எடுத்துரைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்