உலகத் தேர்தல் அமைப்புகளின் சங்கத்தின் 4வது பொதுச் சபை
September 2 , 2019 2137 days 613 0
இந்தியத் தேர்தல் ஆணையமானது (Election Commission of India - ECI) உலகத் தேர்தல் அமைப்புகளின் சங்கத்தின் (Assembly of Association of World Election Bodies: A-WEB) 4வது பொதுச் சபையை 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி பெங்களூரில் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
2019-21 ஆம் காலகட்டத்திற்கான A-WEB இன் தலைவர் பொறுப்பை இந்தியா ஏற்க இருக்கின்றது.
A-WEB என்பது உலகளவில் தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் மிகப்பெரிய சங்கமாகும்.
இது 2013 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதன் நிரந்தரச் செயலகம்: சியோல், தென் கொரியா.