உலகத் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம் – மே 17
May 20 , 2023 790 days 297 0
இந்தத் தினமானது 1969 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மே 17 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.
இது 1865 ஆம் ஆண்டில் சர்வதேசத் தொலைத்தொடர்பு ஒன்றியம் நிறுவப்பட்டதையும், முதலாவது சர்வதேச தந்தி உடன்படிக்கை கையெழுத்தானதையும் குறிக்கிறது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் மூலம் குறைவான வளர்ச்சியடைந்த நாடுகளை மேம்படுத்துதல்” என்பதாகும்.