உலகத்தின் உயரமான எரிமலையில் ஏறிய இரண்டாவது இந்தியர்
July 11 , 2018 2560 days 851 0
அர்ஜென்டினா - சிலி எல்லையில் உள்ள உலகின் உயர்ந்த (6893 மீ) எரிமலை ஓஜோஸ் டெல் சலாடோவின் மேல் மல்லி மஸ்தான் பாபுவிற்கு பிறகு ஏறிய இரண்டாவது இந்திய மலையேறும் நபர் சத்யர்ப் சித்தாந்தா ஆவார்.
இவர் தென் துருவத்தின் கடைசிப் பாகை (தூரம்) வரை 111 கி.மீ. தொலைவை உள்ளடக்கிய தூரத்தில் பறந்திருக்கிறார்.
டிசம்பர் 2017-ல் வின்சன் மாசிப்பில் ஏறி, ஏழு உச்சிகளை ஏறி முடித்த ஐந்தாவது ஒரே இந்தியராகி இருக்கிறார். (மெஸ்னரின் பட்டியல்)
ஓஜோஸ் டெல் சலாடோ சிகரம்
ஓஜோஸ் டெல் சாலாடோ சிகரம் அர்ஜென்டினா-சிலி எல்லையில் உள்ள ஆன்டிஸ் மலைத் தொடரில் அமைந்துள்ள அடுக்கு எரிமலை (எரிமலைக் குழம்பு மற்றும் சாம்பல் ஆகியவற்றால் மாறிமாறியமைந்த அடுக்குகளால் உருவாக்கப்பட்ட எரிமலை) ஆகும்.
6893 மீ உயரத்தில் அமைந்துள்ள உலகின் உயர்ந்த இயங்கும் எரிமலை இதுவாகும்.
மேற்கு மற்றும் தென் துருவத்திலேயே இரண்டாவது உயர்ந்த சிகரம் மற்றும் சிலியிலேயே உயர்ந்த சிகரம் இதுவாகும்.
இதன் அர்த்தம் ஸ்பானிய மொழியில் “உப்பாலான ஒரு பொருளின் கண்கள்“ ஆகும். பனிப்பாறைகளில் காணப்படும் கண்கள் அல்லது காயல்கள் வடிவில் உள்ள மிகுதியான உப்புப் படிமங்களிலிருந்து இவை உருவாகின்றன.
வறண்ட நிலை பொதுவாகக் காணப்பட்டாலும், சிகரத்தின் கிழக்குப் பகுதியில் 6390 மீட்டர் உயரத்தில் அமைந்த 100 மீ விட்டம் கொண்ட நிரந்தரமான எரிமலைவாய் ஏரி இதில் உள்ளது.