உலகப் பட்டினிக் குறியீட்டில் மதிப்பிடப்பட்ட121 நாடுகளில் இந்தியா 107வது இடத்தில் உள்ளது.
இதில் இந்தியா 29.1 என்ற மதிப்பைப் பெற்று 'தீவிர நிலைப்’ பிரிவில் இடம் பிடித்து உள்ளது.
இந்திய நாடானது இலங்கை (64), நேபாளம் (81), வங்காளதேசம் (84), பாகிஸ்தான் (99) ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக கீழ் நிலையில் உள்ளது.
தெற்காசியாவிலேயே ஆப்கானிஸ்தான் (109) மட்டுமே இந்தியாவை விட மோசமான நிலையில் உள்ள ஒரு நாடாகும்.
இது கன்செர்ன் வேர்ல்டுவைட் மற்றும் வெல்த்ஹங்கர்லைஃப் ஆகியவற்றால் கூட்டாக வெளியிடப்பட்ட ஒரு வருடாந்திர அறிக்கையாகும்.
இது நான்கு கூறு குறிகாட்டிகளின் மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டது – ஊட்டச் சத்துக் குறைபாடு, குழந்தை வளர்ச்சியின்மை, குழந்தை வளர்ச்சி குறைபாடு மற்றும் குழந்தை இறப்பு ஆகியவையாகும்.
உலகப் பட்டினிக் குறியீட்டில், பட்டினி நிலைமையின் தீவிரத்தைப் பிரதிபலிக்கிற நிலையில் மதிப்பெண் ஆனது 100 புள்ளி அளவில் கணக்கிடப் படுகிறது.
அதில் சுழியம் என்பது சிறந்த மதிப்பெண் (பட்டினி நிலை இல்லை) மற்றும் 100 என்பது மோசமான நிலை ஆகும்.