TNPSC Thervupettagam

உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீடு 2024

May 7 , 2024 13 days 102 0
  • ரிபோர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் (எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு) ஆனது சமீபத்தில் வருடாந்திர உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டினை வெளியிட்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் 161 ஆம் இடத்தில் இருந்த இந்தியாவின் தரவரிசையானது 2024 ஆம் ஆண்டில் 159 ஆக உயர்ந்தது.
  • இதற்கிடையில், பாகிஸ்தான் இந்தியாவை விட ஏழு இடங்கள் முன்னணியில் 152வது இடத்தில் உள்ளது.
  • ஆனால், உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியாவின் மதிப்பெண் கடந்த ஆண்டில் இருந்த 36.62 என்ற மதிப்பில் இருந்து 31.28 ஆகக் குறைந்துள்ளது.
  • நார்வே மற்றும் டென்மார்க் ஆகியவை RSF பட்டியலில் முதலிடத்தினைப் பெற்றுள்ளன என்ற நிலையில் எரித்திரியா இதில் கடைசி இடத்திலும், அதற்கு முந்தைய இடத்தில்  சிரியாவும் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்