கருத்துச் சுதந்திரம் மற்றும் சுதந்திரமான பத்திரிகைத் துறையை மேம்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
யுனெஸ்கோவின் (UNESCO) பரிந்துரையின் பேரில் 1993-ஆம் ஆண்டு இந்த நாள் அறிவிக்கப் பட்டது.
சுதந்திரமான, சார்பற்ற மற்றும் பன்மைத்துவ ஊடகங்களை ஆதரிக்கும் விண்ட்ஹோக் பிரகடனத்தின் (1991) ஆண்டு விழாவை இந்த நாள் குறிக்கிறது.
யுனெஸ்கோ உலகளாவியப் போக்குகள் அறிக்கை 2022-2025 ஆம் ஆண்டின் படி, 2012-ஆம் ஆண்டிற்குப் பிறகு பத்திரிகைச் சுதந்திரம் மிகக் கடுமையான சரிவைக் கண்டு உள்ளதுடன், சுய-தணிக்கை 60% க்கும் மேல் அதிகரித்துள்ளது.
யுனெஸ்கோ/கில்லர்மோ கானோ உலகப் பத்திரிகைச் சுதந்திரப் பரிசு பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் தனி நபர்கள் அல்லது நிறுவனங்களை கவுரவிக்கிறது.
2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Shaping a Future of Peace: Promoting Press Freedom for Human Rights, Development, and Security" என்பதாகும்.