2025 ஆம் ஆண்டு யுனெஸ்கோ/கில்லர்மோ கானோ உலகப் பத்திரிகைச் சுதந்திரப் பரிசானது லா பிரென்சா- எல் டியாரியோ டி லாஸ் நிகரகுயென்சஸ் எனும் நிகரகுவா செய்தித் தாளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது 2021 ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டிற்கு வெளியே வேறொரு நாட்டில் செயல்பட்டு வருகிறது.
காசாவில் நடைபெற்று வரும் மோதல் தொடர்பான முக்கியத் தகவல்களைத் திரட்டிய பாலஸ்தீனப் பத்திரிகையாளர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் இப்பரிசு வழங்கப்பட்டது.
இந்தப் பரிசுக்கு எல் எஸ்பெக்டடோர் எனும் கொலம்பிய செய்தித்தாளின் நிறுவனர் கில்லர்மோ கானோ இசாசாவின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.
அவர் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதியன்று பொகோட்டாவில் உள்ள அதன் அலுவலகங்களுக்கு முன்னால் படுகொலை செய்யப்பட்டார்.