இந்தத் தினமானது, சர்வதேச நினைவுச் சின்னங்கள் மற்றும் பாரம்பரியத் தளங்கள் தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
இது கலாச்சாரம் மற்றும் இயற்கைப் பாரம்பரியத்திற்கு மிக மதிப்பளிக்கும் விதமாக அனுசரிக்கப் படுகிறது.
இந்தத் தினமானது, இந்தப் பாரம்பரியத் தளங்களைப் பாதுகாப்பதற்காக எனப் பணி ஆற்றும் நபர்களையும் குழுக்களையும் ஊக்குவிக்கிறது.
இந்தத் தினம் ஆனது 1982 ஆம் ஆண்டில் சர்வதேச நினைவுச் சின்னங்கள் மற்றும் பாரம்பரியத் தளங்கள் தொடர்பான சபையினால் (ICOMOS) தொடங்கப் பட்டது.
இது 1983 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் நிலவரப் படி, 196 நாடுகளில் 1,223 உலகப் பாரம்பரியத் தளங்கள் உள்ளன.
இந்தியாவில் 43 உலகப் பாரம்பரியத் தளங்கள் உள்ளன.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Heritage under Threat from Disasters and Conflicts: Preparedness and Learning from 60 years of ICOMOS Actions" என்பதாகும்.