நமது வாழ்வில் பெருங்கடல்கள் கொண்டுள்ள முக்கியத்துவம் பற்றியும் அதனைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் உலக மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
2021 ஆம் ஆண்டிற்கான உலகப் பெருங்கடல் தினத்தின் கருத்துரு, “பெருங்கடல் : வாழ்வு மற்றும் வாழ்வாதாரங்கள்” (The Ocean: Life and Livelihoods) என்பதாகும்.
1992 ஆம் ஆண்டில் ரியோடி ஜெனீரியோவில் நடைபெற்ற புவி உச்சி மாநாட்டில் உலகப் பெருங்கடல் தினம் எனும் ஒரு கருத்தை கனட நாட்டு அரசு முன்வைத்தது.