ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறையானது (UNCTAD) மற்றும் பிற துறைகளுடன் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 2025 ஆம் ஆண்டில் 2.4% ஆகவும் (2024 ஆம் ஆண்டில் இருந்த 2.9% என்ற அளவிலிருந்து), 2026 ஆம் ஆண்டில் 2.5% ஆகவும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் சுமார் 7.1% ஆக இருந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 2025 ஆம் ஆண்டில் 6.3% ஆகக் குறைந்துள்ளது.
ஆனால் இந்தியா இன்றும் முக்கிய உலகப் பொருளாதாரங்களில் மிகவும் ஒரு உயர்ந்த நிலையிலேயே உள்ளது.
இது 2026 ஆம் ஆண்டில் 6.4 சதவீதத்தினை எட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அமெரிக்க நாட்டின் வளர்ச்சி ஆனது வரிகள் மற்றும் கொள்கைகளின் நிச்சயமற்றத் தன்மை காரணமாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் சீனாவின் வளர்ச்சி 2025 ஆம் ஆண்டில் 4.6% ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
காசா, ஹைத்தி, மாலி, தெற்கு சூடான் மற்றும் சூடான் போன்ற பல்வேறு போர்ச் சூழல் மண்டலங்களில் சுமார் 1.9 மில்லியன் பேர் பஞ்சத்தை எதிர்கொள்ளும் ஒரு நிலையில் உள்ளதுடன், உலகளவில் சுமார் 343 மில்லியன் மக்கள் மிகக் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்.
வீட்டுச் செலவினங்களில் உணவிற்குப் பெரும் பங்கைக் கொண்ட இந்தியா போன்ற நாடுகள் உணவுப் பணவீக்கத்தால் மோசமாகப் பாதிக்கப் படுகின்றன.