சர்வதேச நாணய நிதியமானது (IMF) அதன் உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட (WEO) அறிக்கையை வெளியிட்டது, அதில் 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வளர்ச்சி முன்னறிவிப்பை உயர்த்தியுள்ளது.
உலகப் பொருளாதார வளர்ச்சியானது 2025 ஆம் ஆண்டின் 3.5% உடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டில் 0.1 சதவீதப் புள்ளிகள் அதிகரித்து 3.1% ஆக இருக்கும் என கணிக்கப் பட்டு ள்ளது.
2027 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வளர்ச்சி 3.4% ஆக மாறாமல் உள்ளது, அதே நேரத்தில் உலகளாவிய பணவீக்கம் 2026 ஆம் ஆண்டில் 4.7% ஐ எட்டும் என கணிக்கப் பட்டுள்ளது.
ஈரான் போர் மற்றும் அதிகரித்து வரும் எரிசக்தி விலைகள், எரிசக்தியை இறக்குமதி செய்யும் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளை அச்சுறுத்துகின்றன, அதே சமயம் செயற்கை நுண்ணறிவில் (AI) முதலீடு செய்வது சில மேம்பட்ட பொருளாதாரங்களில் வளர்ச்சியை ஆதரிக்கிறது.
மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியப் பகுதியானது 2026 ஆம் ஆண்டில் 0.3% சுருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் மேம்பட்ட பொருளாதாரங்கள் 2.1% வளரும் என எதிர்பார்க்கப் படுகிறது.