உலகளாவிய நோய்ச் சுமை குறித்த கூட்டமைப்பானது (Global Burden of Disease Collaboration) உலகம் முழுவதுமுள்ள புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை குறித்த ஆய்வு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கையானது 1.1 பில்லியனாக உயர்ந்துள்ளது என இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் 15 முதல் 24 வயதிற்குட்பட்ட 2 கோடி பேர் புகைபிடிப்பவர்களாக இருந்தனர் என இந்த அறிக்கை கூறுகிறது.
இந்தியா உலகளவில் இரண்டாவது மிக அதிக எண்ணிக்கையில் புகைபிடிப்பவர்களைக் கொண்டுள்ள அதே சமயம் இதில் சீனா முதலிடத்தில் இருக்கின்றது.
மேலும் இந்தியாவில் 1990 ஆம் ஆண்டிலிருந்து 15 முதல் 24 வயதிற்குட்பட்டவர்களின் புகைபிடிக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.