உலகளவிலான குழந்தைப் பருவ நீரிழிவு நோய்ப் பாதிப்பு மற்றும் உயிர் இழப்புகளில் இந்தியா முன்னணி
July 8 , 2023 670 days 349 0
2019 ஆம் ஆண்டில் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான குழந்தைப் பருவ நீரிழிவு நோய்ப் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் இந்தியாவில் பதிவாகியுள்ளது.
JAMA Network என்ற இதழில் இந்த ஆய்வறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் மோசமான உடல்நிலை, குறைபாடு மற்றும் முன்கூட்டிய இறப்பு ஆகிய பல காரணிகளினால் ஏற்படும் ஆயுட்கால இழப்பும் (DALY) அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒரு DALY என்பது ஒரு வருட முழு ஆரோக்கிய வாழ்விற்குச் சமமான இழப்பினைக் குறிக்கிறது.
உலகளவில், 2019 ஆம் ஆண்டில், 227,580 குழந்தைப் பருவ நீரிழிவு நோய்ப் பாதிப்புகள், 5,390 உயிரிழப்புகள் மற்றும் 519,117 மோசமான உடல்நிலை, குறைபாடு மற்றும் முன் கூட்டிய இறப்பு ஆகியவற்றினால் ஏற்படும் ஆயுட்கால இழப்புகள் பதிவாகியுள்ளன.
இது 1990 ஆம் ஆண்டு முதல் பதிவான அளவிலிருந்து 39.4 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது.
10 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் மத்தியில் மிக அதிக அளவிலான (52.06 சதவீதம்) நோய் பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 முதல் 4 வயது வரையிலான குழந்தைகள் மத்தியில் மிகச்சிறிய அதிகரிப்பு (30.52 சதவீதம்) பதிவாகியுள்ளது.
இந்தியாவில் பதிவான நோய்ப் பாதிப்பு விகிதம் 1990 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் முறையே 10.92 மற்றும் 11.68 ஆக இருந்தது.
இதற்கு நேர்மாறாக, 1990 ஆம் ஆண்டில் 6,719 ஆக இருந்த உலகளாவிய குழந்தைப் பருவ நீரிழிவு நோய்ப் பாதிப்பினால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையானது 2019 ஆம் ஆண்டில் 5,390 ஆகக் குறைந்துள்ளது.