உலகளவிலான தற்கொலை எண்ணிக்கை – 2019
June 25 , 2021
1454 days
587
- 2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட உலகளவிலான தற்கொலை எண்ணிக்கையைப் பற்றிய ஒரு அறிக்கையானது உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது.
- இந்த அறிக்கையின்படி, தற்போதைய நிலவரங்களின் அடிப்படையில் 38 நாடுகளில் மட்டுமே தேசியத் தற்கொலை தடுப்பு உத்திகள் கையாளப் படுகின்றன.
- 2019 ஆம் ஆண்டில் ஏற்கனவே தற்கொலை நெருக்கடி நிலை நிலவியது.
- 2019 ஆம் ஆண்டில் நூறில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார்.
- 58% தற்கொலைகள் 50 வயதிற்கு முற்பட்டவர்களால் மேற்கொள்ளப் பட்டவை.
- 2019 ஆம் ஆண்டில் உலகளவில் 15-29 வயதிற்குட்பட்ட இளம் பருவத்தினரின் இறப்பிற்குத் தற்கொலையானது நான்காவது முன்னணி காரணியாக விளங்குகிறது.
- 2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட உலகளாவிய தற்கொலைகளில் 77% ஆனது குறைவான மற்றும் நடுத்தர வருமானமுடைய நாடுகளிலேயே நிகழ்ந்துள்ளன.
- ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளின் தற்கொலை விகிதங்கள் உலக சராசரியை விட அதிகமாக உள்ளன.
- தென்கிழக்காசியாவைப் பொறுத்தவரை இந்தியாவில் தற்கொலை வீதமானது அதிகமாக உள்ளது.
- 2017 ஆம் ஆண்டில் 9.9 ஆக இருந்த தற்கொலை வீதமானது 2018 ஆம் ஆண்டில் 10.2 ஆக உயர்ந்துள்ளது.

Post Views:
587