உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய வேளாண் முறைகள் (GIAHS)
May 26 , 2020 1880 days 761 0
சமீபத்தில் உணவு மற்றும் வேளாண் அமைப்பானது (FAO - Food and Agriculture Organization) சீனா, கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் 4 தேயிலை சாகுபடித் தளங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய வேளாண் முறைகளாகத் தேர்ந்தெடுத்துள்ளது.
GIAHS (Globally Important Agricultural Heritage Systems) ஆனது வேளாண் பாரம்பரிய முறைகளைப் பாதுகாத்து, ஆதரவளிப்பதற்காக FAOவினால் தொடங்கப் பட்டதாகும்.
GIAHS ஆனது வேளாண் பன்முகத் தன்மை, இடர் தாங்கும் சூழல் அமைப்புகள் மற்றும் மதிப்புமிக்க கலாச்சாரப் பாரம்பரியங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ள அழகியல் சார்ந்த தலைசிறந்த நில அமைப்புகளாகும்.
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 3 GIAHS தளங்கள் பின்வருமாறு:
கேரளாவில் கடல் மட்டத்திற்குக் கீழே மேற்கொள்ளப் படும் குட்டநாடு வேளாண் முறை
ஒடிசாவின் கோராபுட் பாரம்பரிய வேளாண்மை
காஷ்மீரின் பாம்பூர் குங்குமப்பூ பாரம்பரிய வேளாண்மை
FAO என்பது பட்டினியை ஒழித்தல், ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தல் ஆகியவற்றிற்கான சர்வதேச அளவிலான முயற்சிகளை வழிநடத்தும் ஐக்கிய நாடுகளின் ஒரு சிறப்பு நிறுவனமாகும்.