சர்வதேச சூரிய சக்தி கூட்டணி (ISA), புது தில்லியில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு இந்திய AI தாக்க உச்சி மாநாட்டில் உலகளாவிய AI-for-Energy திட்டத்தினை அறிமுகப் படுத்தியது.
120க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளில் செயற்கை நுண்ணறிவை (AI) தூய்மையான எரிசக்தி அமைப்புகளில் ஒருங்கிணைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இது இந்தியாவின் மின்சாரத் துறை அமைச்சகம் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் (MeitY) இணைந்து தொடங்கப்பட்டுள்ளது.
வளரும் நாடுகளில் மின் கட்டமைப்பு நிலைத்தன்மையை மேம்படுத்துதல், புதுப்பிக்கத் தக்க எரிசக்திப் பயன்பாட்டை அதிகரித்தல் மற்றும் மலிவு விலையில் நம்பகமான மின்சார அணுகலை உறுதி செய்தல் ஆகியவை இதன் நோக்கமாகும்.