இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், மதராஸ் மற்றும் இந்தியா AI திட்டம் ஆகியவை சென்னையில் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) மாநாட்டை நடத்த உள்ளன.
இந்த நிகழ்வானது, பாதுகாப்பான, நம்பகமான மற்றும் உள்ளடக்கியச செயற்கை நுண்ணறிவை (AI) ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மாநாடு ஆனது AI பாதுகாப்பு, நிர்வாகக் கட்டமைப்புகள் மற்றும் உலகின் தெற்கு நாடுகளுக்கான AI பாதுகாப்பு பொது கருத்தாக்கம் பற்றி விவாதித்தது.
இந்த மாநாடு 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 முதல் 20 ஆம் தேதி வரை புது டெல்லியில் திட்டமிடப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டு இந்தியா-AI தாக்க உச்சி மாநாட்டிற்கான ஆயத்த நிகழ்வாக செயல்படுகிறது.
உலகளவில் ஒன்றோடொன்று ஒருங்கி இயங்கக் கூடிய, ஆனால் இந்தியாவின் சமூக மற்றும் தொழில்நுட்பத் தேவைகளுக்கு ஏற்ற AI அமைப்புகளை உருவாக்குவதே இதன் குறிக்கோள் ஆகும்.