மனித நோயெதிர்ப்புச் சக்தி குறைபாட்டு வைரஸால் (HIV) பாதிக்கப்பட்டு வாழும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து லான்செட் HIV வயதாதல் ஆணையம் தனது 2026 ஆம் ஆண்டு அறிக்கையை வெளியிட்டது.
2025 ஆம் ஆண்டில், சுமார் 11.5 மில்லியன் HIV பாதிப்புள்ள நபர்கள் 50 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களாக இருந்தனர்.
இந்த எண்ணிக்கை 2040 ஆம் ஆண்டிற்குள் 20.2 மில்லியனை எட்டும் எனத் திட்டமிடப் பட்டுள்ளது, இது HIV-யுடன் வாழும் அனைத்து மக்களிலும் 51% ஐக் குறிக்கிறது.
இந்த முதியவர்களில் சுமார் 96% பேர் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை (ART) HIV உள்ள நபர்கள் நீண்ட காலம் வாழ உதவி உள்ளது.
HIV பராமரிப்பானது வயது தொடர்பான நோய்கள் மற்றும் மனநலத்திற்கான சேவைகளுடன் இணைக்கப்பட வேண்டும் என்று அறிக்கை அழைப்பு விடுத்துள்ளது.